என் தங்கைக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? விரைவில் திருமணம் நடக்க பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? அவரின் கோப குணமும் மாற வேண்டும்.
-வாசகர், திருவாரூர்.
உங்கள் சகோதரிக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தில் சுகாதிபதியான சனி பகவானுடன் இணைந்திருக்கிறார். தனாதிபதி பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய், சனி பகவான்களையும் பார்வை செய்கிறார்.
குரு மங்கள யோகம் உண்டாகிறது. தர்மகர்மாதிபதிகள் (சந்திர, சூரிய பகவான்கள்) ராகு பகவானுடன் கூடி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மாங்கல்ய ஸ்தானாதிபதியும் (எட்டாமதிபதி) லாபாதிபதியான புத பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்திருக்கிறார். தற்சமயம் குரு மஹா தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தென்கிழக்கு திசையிலிருந்து படித்த நல்ல தொழில் செய்யும் வரன் அமைந்து திருமணம் கைகூடும். அவரது கோபமும் குறைந்துவிடும். தொடரும் சனி மஹாதசையும் யோக தசையாகச் செல்லும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.