முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

கடனை அடைத்து விடுவீர்கள்

நான் கொத்தனார் வேலை செய்து வருகிறேன். என் தகுதிக்கு மீறிய கடன் உள்ளது. வருமானம் கூடி கடனை அடைக்க வேண்டும். எப்பொழுது என் கடன் அடையும்? 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


நான் கொத்தனார் வேலை செய்து வருகிறேன். என் தகுதிக்கு மீறிய கடன் உள்ளது. வருமானம் கூடி கடனை அடைக்க வேண்டும். எப்பொழுது என் கடன் அடையும்? 

- வாசகர், அருப்புக்கோட்டை.

உங்களுக்கு ரிஷப லக்னம்,  மிதுன ராசி,  மிருகசீரிஷம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அவர் கடன் வீட்டுக்கதிபதியாக ஆவதும் சிறப்பு. இரண்டு,  ஐந்தாம் வீட்டுக்கதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில், ஏழு, பன்னிரண்டாமதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுகாதிபதி சூரிய பகவான் ஐந்தாம் வீட்டில் எட்டு, பதினொன்றாமதிபதியான குருபகவானுடனும், தர்மகர்மாதிபதியான சனி பகவானுடனும் இணைந்திருக்கிறார்.  மூன்றாம் வீட்டில் ராகு பகவானும், ஒன்பதாம் வீட்டில் கேது பகவானும் அமர்ந்திருக்கிறார்கள்.

தற்சமயம் சனி பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்கும். இந்தக் காலம் வருமானம் கூடும் காலமாக ஆவதால் வருமானம் கூடி கடனை அடைத்து விடுவீர்கள்.  சேமிப்பும் உயரும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →