ஜோதிட கேள்வி பதில்கள்

நான் பி.எஸ்.சி., படித்துள்ளேன். எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலை எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?  - வாசகி, பெரம்பூர்

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார். சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் குருபகவானும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் புதபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உங்களுக்கும் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT