ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் அரசுத் தேர்வு எழுதி வருகிறார். அரசு உத்தியோகம் கிடைக்குமா? எப்போது திருமணம் கைகூடும்? எத்தகைய வரன் அமையும்? தோஷம் ஏதும் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகி, சேலம்

DIN

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவானுடனும் இணைந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான், இரண்டாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்று, ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் (குரு சந்திர யோகம்) எட்டாம் வீட்டையும் தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானையும் (சிவராஜயோகம்) பார்வை செய்கிறார். கல்வி ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்றிருக்கும் புதபகவானாலும் கேதுபகவானாலும் பார்க்கப்படுகிறார். இதனால் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். மத்திய அரசு வேலைக்கும் முயற்சி செய்யச் சொல்லவும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT