ஜோதிட கேள்வி பதில்கள்

நிரந்தர வேலை அமையும்

DIN


திருமணமான என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எம்.எஸ்சி, எம்பிஏ படித்துள்ளார். நிரந்தர வேலை இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்? நிரந்தர வேலைகிடைக்குமா?

வாசகர், சத்தியமங்கலம்.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான், லக்னத்தில் மூல திரிகோணம் பெற்று அமர்ந்து ஐந்தாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சூரிய சுக்கிர பகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

குரு பகவான் சூரிய பகவானைப் பார்ப்பதால் சிவராஜயோகம் உண்டாகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சந்திர பகவானுடனும், உச்சம் பெற்றுள்ள சனி பகவானுடனும் இணைந்திருக்கிறார்.

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரிய, குரு, புத பகவான்கள் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பதும், சனி செவ்வாய் பகவான்கள் ஆட்சி பெற்றிருப்பதும், சுக்கிர பகவான் வர்கோத்தமத்தில் இருப்பதும் சிறப்பாகும்.

தற்சமயம் புத மஹா தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதாலும், ராகு பகவான் அஷ்ட லட்சுமி யோகத்தினைப் பெற்றிருப்பதாலும் இன்னும் ஓராண்டுக்குள் நல்ல வருமானம் வரும் நிரந்த வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT