ஜோதிட கேள்வி பதில்கள்

எதிர்காலம் சிறப்பாக அமையும்

DIN


என் மகன் பெட்ரோலியத்துறையில் பொறியாளர். அவருக்கு தொண்டை புற்றுநோய் வந்துள்ளது. எப்பொழுது குணமடைவார்? திருமணம், எதிர்காலம் பற்றிக் கூறவும். 

-வாசகர், சேலம். 

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று, ராகு பகவானுடன் இணைந்திருந்தாலும் நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ள செவ்வாய் பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான துலாம் ராசி அடைகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்து அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சூரியபகவானின் மீதும் (சிவராஜயோகம்) சந்திர பகவானின் மீதும் (குருச் சந்திரயோகம்) படிகிறது. அவருக்கு தற்சமயம் சூரிய பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதி வரைக்கும் நடக்கும். அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் அவரின் புற்றுநோய் முழுவதுமாக குணமடைந்து விடும். உத்தியோகத்திற்குச் செல்லவும் வாய்ப்பு உண்டாகிவிடும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT