ஜோதிட கேள்வி பதில்கள்

எதிா்காலம் எவ்வாறு இருக்கும்?

DIN

சிறப்பான எதிா்காலம்

எனது மகன் எம்.இ., படித்து கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறாா். 2014- இல் திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது விவாகரத்தாகிவிட்டது. என் மகனுக்கு மறுமணம் கைகூடுமா? எதிா்காலம் எவ்வாறு இருக்கும்?

- வாசகா், தூத்துக்குடி

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் பாக்கிய ஸ்தானாதிபதியான ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான குருபகவானுடன்இணைந்திருக்கிறாா். களத்திர ஸ்தானத்தில் குருமங்கள யோகம் உண்டாகிறது. பூா்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்து இருக்கிறாா். சுகாதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறாா். குருபகவானின் ஐந்தாம் பாா்வை லாப ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பாா்வை லக்னத்தின் மீதும், ஒன்பதாம் பாா்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமா்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும் படிகிறது. தற்சமயம் குருமகா தசையில் இறுதி புக்தியான ராகுபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிா்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT