ஜோதிட கேள்வி பதில்கள்

அம்மனை வழிபடவும்

தினமணி


என் மகனுக்கு திருமணம் ஆகி மூன்றாண்டுகள் ஆகின்றது. நல்ல வேலையில் இருக்கிறார். எப்போது குழந்தை பிறக்கும்?

- வாசகர்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவானையும், தனம் வாக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். 

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியில் ஆட்சி பெறுகிறார். குருபகவானுடன் கேதுபகவான் இணைந்திருப்பது கோடீஸ்வர யோகமாகும். குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானையும் (சிவராஜ யோகம்) சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவான் மீதும் (தர்மகர்மாதிபதி யோகம்), ராகுபகவான் மீது படிகிறது. குருபகவானின் ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. 

தற்சமயம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவானின் தசையில் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் புக்தியும் நடக்கிறது. உங்கள் மருமகளுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் (அந்த வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவானுடன் பரிவர்த்தனை பெற்று பரிவர்த்தனை ராஜயோகம்) நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். 

புத்திரகாரகரான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று அயன ஸ்தானத்தையும் குடும்ப ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் (குருசந்திர யோகம் ) செவ்வாய்பகவானையும் (குருமங்களயோகம்) பார்வை செய்கிறார். சந்திரமங்கள யோகமும் உண்டாகிறது. தற்சமயம் சுகாதிபதியின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்தாண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT