ஜோதிட கேள்வி பதில்கள்

பணியிலுள்ள மணமகள்

DIN


என் மகன் நிதி நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளார். மேலாண்மைப் படிப்பைப் படித்திருக்கிறார். 36 வயதாகியும் திருமணம் அமையவில்லை. எப்போது திருமணம் கைகூடும்.வேலைக்குச் செல்லும் பெண் அமைவாரா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

- வாசகி, சென்னை

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள தன, களத்திராதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகாயோகமும் உண்டாகிறது. 

பூர்வபுண்ணியாதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானத்தில் குரு, புத, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். இதனால் சிவராஜயோகம், புதஆதித்ய யோகம், குருசந்திர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் செவ்வாய்பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT