ஜோதிட கேள்வி பதில்கள்

தென்கிழக்கு திசையில் பெண் அமையும்! 

DIN


என் மகன் செய்துவரும் தையல் தொழில் அவருக்கு ஏற்றதா? அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? எந்தத் திசையில் இருந்து பெண் அமைவார்?

-சிட்டிபாபு, ஆம்பூர்.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம், மீன ராசி. லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான புத பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் சுக, களத்திர ஸ்தானாதிபதியான குரு பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 

பூர்வ புண்ணியாதிபதி, ஆறாமதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் விபரீத ராஜயோகத்தைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதியான சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் லாபாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். தைரிய அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து சூரிய, சந்திர பகவான்களுக்கு கேந்திரத்தில் இருப்பது சிறப்பு. குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை அயன ஸ்தானத்தில் மீதும், ஒன்பதாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ஞான காரகரான கேது பகவானின் மீதும் படிகிறது. 

தற்சமயம் லக்னாதிபதியான புத பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். அவர் செய்து வரும் தையல் தொழில் அவர் ஜாதகத்திற்கு ஏற்றது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT