ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? படிப்புக் குறைவு. ஒரு மருத்துவமனையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். காது கேட்பதிலும் சிறிய குறைபாடு உள்ளது. பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

DIN

என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? படிப்புக் குறைவு. ஒரு மருத்துவமனையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். காது கேட்பதிலும் சிறிய குறைபாடு உள்ளது. பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

-கனகராஜ், கோவை. 

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் உச்சம் பெற்று, ஆட்சி பெற்றுள்ள சந்திர (குரு சந்திர யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் சூரிய பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

லாபாதிபதி, அயன ஸ்தானாதிபதி சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திலமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், அங்கு உச்சம் பெற்றமர்ந்திருக்கும் குரு பகவானையும், ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் பார்வை செய்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்குமதிபதியான புத பகவான் லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று, உச்சம் பெற்றுள்ள குரு பகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. 

தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு களத்திர ஸ்தானாதிபதிக்கு சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT