ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் மருத்துவராகி நல்ல நிலையில் உள்ளார். தற்சமயம் அவருக்கு ராகு பகவானின் தசை நடக்கிறது. எப்பொழுது தலைமைப் பதவி கிடைக்கும்... அவரின் எதிர்காலம் பற்றியும் கூறவும்... 

DIN

என் மகன் மருத்துவராகி நல்ல நிலையில் உள்ளார். தற்சமயம் அவருக்கு ராகு பகவானின் தசை நடக்கிறது. எப்பொழுது தலைமைப் பதவி கிடைக்கும்... அவரின் எதிர்காலம் பற்றியும் கூறவும்... 

-வாசகி, ஆரணி. 

உங்கள் மகனுக்கு மகர லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் லக்னத்திலேயே ஆட்சி பெற்று சசமஹா யோகத்தைக் 
கொடுக்கிறார். 
பூர்வ புண்ணியாதிபதி தொழில் ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் தைரிய, அயன ஸ்தானாதிபதியான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவானுடன் இணைந்திருக்கிறார். ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஒன்பதாம் வீட்டிலேயே ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று சூரிய, செவ்வாய் பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 
களத்திர நட்பு ஸ்தானாதிபதி சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. குரு பகவானின் ஐந்தாம் பார்வை தன் மூலத் திரிகோண வீடான பன்னிரண்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீது படிவதும் சிறப்பாகும். பொதுவாகவே மகர லக்னத்திற்கு ராகு பகவான் லக்ன சுபராகவே கருதப்படுகிறது. 
தனுசு ராசியில் அவர் அமர்ந்திருப்பது -கோதண்ட ராகு- என்று அழைக்கப்படுகிறது. அவரை குருபகவான் பார்வை செய்வது பருத்திப் புடவையாய்க் காய்த்தது போலாகும். அவருக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ராகு மஹா தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடக்க இருப்பதால், அவரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்காலம் வளமாகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT