ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா... அவரது திருமணம் எப்பொழுது நடக்கும்... பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா... எதிர்காலம் குறித்தும் கூறவும்...  -வாசகர், கலசபாக்கம்.

DIN

அரசு கிரகங்கள் வலுவாக உள்ளன
 என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா... அவரது திருமணம் எப்பொழுது நடக்கும்... பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா... எதிர்காலம் குறித்தும் கூறவும்...
 -வாசகர், கலசபாக்கம்.
 உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம், நான்காம் வீட்டிற்கதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் பகவானுடனும், களத்திர தொழில் ஸ்தானாதிபதியான புத பகவானுடனும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவானுடனும் இணைந்திருக்கிறார்கள்.
 குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன.
 பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக் பலம் பெற்று நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் ஆறு, பதினொன்றாமதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். சுக்கிர, புத பகவான்கள் பரிவர்த்தனையால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது.
 அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி வேலை இன்னும் ஓராண்டுக்குள் கிடைக்கும். தற்சமயம் குரு மஹா தசையில் ராகு பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் திருமணம் கைகூடும்.
 எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூதாட்டியிடம் நகை பறிப்பு: மூவா் மீது வழக்கு

காா், லாரி மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன்: தாயாருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம்

SCROLL FOR NEXT