ஜோதிட கேள்வி பதில்கள்

குரு மங்கள யோகம்!

DIN


என் கடன் தீருமா? இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா? சொந்த ஊரில் கடன் வாங்கி கட்டிய அதே வீட்டில் பழையபடி குடியிருக்க முடியுமா? எனது மற்றும் என் மனைவியின் உடல்நிலை பற்றியும், எங்களது இறுதிக்காலம் பற்றியும் கூறவும்.

-வாசகர், பெரும்பாக்கம்.

உங்களுக்கு  ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.

களத்திர நட்பு ஸ்தானாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று மஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெற்று குரு (குரு மங்கள யோகம்) பகவானுடனும், புத ஆதித்யர்களுடனும் இணைந்திருக்கிறார். தர்ம கர்மாதிபதி ஆயுள் காரகராகி ஆயுள் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தீர்க்காயுள் உண்டு.

களத்திர ஸ்தானமும் வலுவாக இருப்பதால் உங்கள் மனைவியின் ஆயுள், ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும்.

லக்னாதிபதியே ஆறாம் வீட்டுக்கதிபதியாகி, நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு உங்கள் கடன்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். 

2024-ஆம் ஆண்டு முடிவதற்குள் முழுமையாகக் கடன்கள் அடைந்து விடும். நீங்கள் கட்டிய வீட்டில் மறுபடியும் வசிக்க வாய்ப்புண்டாகும்.

பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT