முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனின் ஜாதகப்படி ஏதும் தோஷம் உள்ளதா? அவர் விரும்பும் நீதிபதி பதவியை அடைவாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

என் மகனின் ஜாதகப்படி ஏதும் தோஷம் உள்ளதா? அவர் விரும்பும் நீதிபதி பதவியை அடைவாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

என் மகனின் ஜாதகப்படி ஏதும் தோஷம் உள்ளதா? அவர் விரும்பும் நீதிபதி பதவியை அடைவாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

-வாசகர், புவனகிரி. 

உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுக ஸ்தானத்தில் திக் பலம் பெற்றிருப்பது சிறப்பு. அதோடு அவரின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களின் மீதும் படிகிறது. 

ஐந்து, பத்தாம் வீடுகளுக்கதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். 

ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்திலமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 

குரு பகவான் சட்டத்துறையை முதன்மையாகக் குறிப்பவராகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும், ஏழாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. தற்சமயம் புத மஹா தசையில் சுக்கிர புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். நீதிபதி பதவிக்கான யோகமும் உள்ளது. இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும். மற்றபடி பெரிதாக தோஷம் என்று எதுவும் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →