ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரருக்கு எப்பொழுது திருமணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? ஒரு பெண் வீட்டார் நெருங்கி வருகிறார்கள்; சம்பந்தம் செய்யலாமா? 

DIN

என் சகோதரருக்கு எப்பொழுது திருமணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? ஒரு பெண் வீட்டார் நெருங்கி வருகிறார்கள்; சம்பந்தம் செய்யலாமா? 

-வாசகர், அம்பத்தூர். 

உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம்; ரேவதி நட்சத்திரம் அல்ல.  லக்னம், ஆறாமதிபதி சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். 

இரண்டு, ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்ற குரு பகவானுடனும், நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானுடனும் இணைந்திருக்கிறார். குருமங்கள யோகமும் பலமாக ஏற்படுகிறது. 

தர்ம கர்மாதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானமான, தன் ஆட்சி வீடான மீன ராசியின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும் படிகிறது. 

தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் செவ்வாய் புக்தி நடக்க இருக்கிறபடியால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். 

அவருக்கு வந்த பெண்ணிற்கும் ரிஷப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. வரனுக்கும் எட்டாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். 

களத்திர நட்பு ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம்பெற்று, பாக்கியாதிபதி சனி பகவானுடனும், புத ஆதித்யர்களுடனும் இணைந்திருப்பதால் பொருத்தம் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT