ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரர் கார், வேன் டிராவல்ஸ் தொழில் செய்ய விரும்புகிறார். அது அவருக்கு ஏற்புடையதா? சொந்த வீடு கட்டுவாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்? 

DIN

என் சகோதரர் கார், வேன் டிராவல்ஸ் தொழில் செய்ய விரும்புகிறார். அது அவருக்கு ஏற்புடையதா? சொந்த வீடு கட்டுவாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்? 

- வாசகி, சீர்காழி.

உங்கள் சகோதரருக்கு கன்னி லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி, கர்மாதிபதி புத பகவான் அயன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்திற்கு அதிபதியான ஐந்தாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்று செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். 

சுக, களத்திராதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று, ஐந்தாம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டையும் (ஆயுள் ஸ்தானாதிபதி, ஆயுள்காரகர் எட்டாம் வீட்டைப் பார்வை செய்வதால் தீர்க்காயுள்), ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும் பார்வை செய்கிறார். 

தற்சமயம் லாப ஸ்தானத்தில் புத, சந்திர பகவான்களுடன் இணைந்திருக்கும் சூரிய மஹா தசையில் லாபாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே திருமணம் கைகூடும். டிராவல்ஸ் தொழில் அவருக்கு ஏற்றதாகும். 2024 -ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த வீடு கட்டுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச் சொல்லவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT