ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு 2018-ஆம் ஆண்டு திருமணமாகியது. 2 நாள்கள் மட்டுமே வாழ்ந்து, கணவரின் நடவடிக்கைகளால் பிரிந்துவிட்டார். 2020-ஆம் ஆண்டு விவகாரத்தாகிவிட்டது. எப்போது மறுமணமாகும்?

தினமணி

என் மகளுக்கு 2018-ஆம் ஆண்டு திருமணமாகியது. 2 நாள்கள் மட்டுமே வாழ்ந்து, கணவரின் நடவடிக்கைகளால் பிரிந்துவிட்டார். 2020-ஆம் ஆண்டு விவகாரத்தாகிவிட்டது. எப்போது மறுமணமாகும்?

-வாசகர், சங்கரன்கோவில்.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதம்.  லக்னாதிபதி, சுகாதிபதியான புத பகவான் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிர பகவான் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.  மூத்த உடன்பிறந்தோர், சுய சம்பாதியம், செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சி, அனைத்து விஷயங்களிலும் லாபம் ஆகியவைகளுக்கு லாபஸ்தானமான பதினொன்றாம் வீடு காரணமாகிறது. 
அனைத்து விஷயங்களிலும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் ஜாக்கிரதையுடனும் கலந்துகொள்ளும் சுபாவம், புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் ஞானம்,  படிப்பைவிட அனுபவ ஞானத்தால் சாதனை, கணக்கு, வாதம், பிரதிவாதம் ஆகியவற்றின் சிறப்பான தேர்ச்சி ஆகியவைகளை பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கும் புத பகவான் வழங்குவார். அதோடு, ஒன்றுக்கு மேற்பட்ட பூமிகளால் லாபம், குறைவான உழைப்பால் சுகமான வாழ்வு ஆகியவைகளையும் புத பகவான் ஏற்படுத்திக் கொடுப்பார்.
பூர்வ புண்ணிய புத்திரப் புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டுக்கும், அயன சயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தனமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று, பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார்.
பொதுவாக, அதிபலம் பெற்ற சுக்கிர பகவானால் அரசு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.  அவர் களத்திரக் காரகருமாவதால் சம அந்தஸ்திலுள்ள வாழ்க்கைத் துணை அமைந்து, மண வாழ்க்கை சீரும், சிறப்புமாக வாழவும் வழி உண்டாகும்.
சுக்கிர பகவான் சனி பகவானின் சாரத்தில்  (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில்  தன்மூல திரிணோ வீடான துலாம் ராசியை அடைகிறார்.   புத்திர பாக்கியத்துக்கு குறை உண்டாகாது. 
அஷ்டம ஆயுள்  (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம்)   புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டுக்கும் அதிபதியுமான சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலேயே  சூரிய பகவான் களத்தில்  (உத்திராடம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றும், வர்கோத்தமம் பெற்று அமைந்திருப்பது சிறப்பாகும்.  இதனால், தீர்க்காயுள் உண்டாகும். 
சந்திர பகவானின்  நான்காம் வீட்டில்  (கேந்திரத்தில்) ஆட்சி பெற்று இருப்பதால், பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகம் உண்டாகிறது. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கு அதிபதியுமான சந்திர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்திர ஸ்தானத்தில் குரு பகவான் சாரத்தில் (விசாக நட்சத்திரம்)  அமர்ந்து, நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
தைரிய, முயற்சி, வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டுக்கு அதிபதியுமான சூரிய பகவான், லாப ஸ்தானமான  பதினொன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து, நவாசம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
நற்குணம், தன தான்ய மேன்மை, வண்டி வாகன யோகம், எதிரிகளை ஜெயித்தல் ஆகியவைகள் உண்டாகும்.
சுபாவ அசுப கிரகங்களான சூரிய,  சனி, செவ்வாய், ராகு/கேது பகவான்கள் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு செவ்வாய் பகவானின் வீட்டில் அமர்ந்திருக்கும் சூரிய பகவான் சிறப்பான புகழ், கீர்த்தி, கௌரவம் ஆகியவைகளை உண்டாக்குவார்.
ருணம் (கடன்), ரோகம் (வியாதி)  சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டுக்குமதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான் லக்னத்தில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில், கும்ப ராசியை அடைகிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் சந்திர ( குரு சந்திர யோகம்)  பகவானின்  மீதும் படிகிறது. ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும்,  ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்)  பகவானின் மீதும் படிகிறது.
கேது பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில்,  புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில்,  தனுசு ராசியை அடைகிறார்.  
ராகு பகவான் அஷ்டமஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.  அவருக்கு தற்சமயம்புத பகவானின் தசையில் சந்திர பகவானின் புத்தி இந்த ஆண்டு இறுதி வரையில் நடப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானத்துக்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் அமைந்து மறுமணம் கை கூடும். 
பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலை(யில்) சித்திரம்... மன்னாரா சோப்ரா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் தரிசனம்

பயங்கரவாதம், போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

குவாஹாட்டி டெஸ்ட்: முதல் நாளில் தென்னாப்பிரிக்கா 247 ரன்கள் குவிப்பு!

சிவப்பு காதல்... காஷிகா சிசோதியா!

SCROLL FOR NEXT