ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எழுத்துத் துறையில் முன்னேற்றம் உண்டாகுமா? இருந்த பணத்தையும் நிலத்தில் முதலீடு செய்துவிட்டேன். வேறு என்ன தொழில் செய்யலாம்? 

எனக்கு எழுத்துத் துறையில் முன்னேற்றம் உண்டாகுமா? இருந்த பணத்தையும் நிலத்தில் முதலீடு செய்துவிட்டேன். வேறு என்ன தொழில் செய்யலாம்? 

DIN

எனக்கு எழுத்துத் துறையில் முன்னேற்றம் உண்டாகுமா? இருந்த பணத்தையும் நிலத்தில் முதலீடு செய்துவிட்டேன். வேறு என்ன தொழில் செய்யலாம்? 

வாசகர், சத்துவாச்சேரி. 

உங்களுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்து ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் பாக்கியாதிபதி, அயன ஸ்தானாதிபதியான குரு (குரு மங்கள யோகம்) பகவானையும், கேது பகவானையும் பார்வை செய்கிறார். 
பூர்வ புண்ணியாதிபதி சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புத (புத ஆதித்ய யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், அங்கு உச்சம் பெற்று, சச மஹா யோகத்தைப் பெறும் தொழில், லாபாதிபதியான சனி பகவானின் மீதும், சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும் படிகிறது. 
குரு பகவானின் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய், ராகு பகவான்களின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிர பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு கழிந்த பிறகு நீங்கள் வாங்கி வைத்துள்ள நிலங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். வேறு எந்தத் தொழிலும் செய்ய வேண்டாம். புத பகவான் வலுத்துள்ளதால் எழுத்துத் துறையில் முன்னேற்றம் உண்டாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானே... ஜான்வி கபூர்!

ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

SCROLL FOR NEXT