என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையா? வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உள்ளதா? பூர்வீகச் சொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது தீரும்? கடன் வழக்கு எப்பொழுது முடிவுக்கு வரும்?
ராதாகிருஷ்ணன், காரமடை.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி குரு பகவான் அயன சயன மோட்ச ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
பாக்கியாதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று ஆறு மற்றும் பதினொன்றாம் அதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. களத்திர தொழில் ஸ்தானாதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருப்பதும் சிறப்பாகும். அவருக்கு தனியார்துறை வேலையே சிறப்பாக அமையும். அதில் நன்றாக முன்னேறுவார். தற்சமயம் சந்திர மஹா தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏழரை நாட்டுச் சனியும் முடிவடைந்து விடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் பூர்வீகச் சொத்தில் உள்ள வில்லங்கமும் அடுத்த ஆண்டு தீர்ந்துவிடும். கடன் வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.