எண் ஜோதிடம்

ஜூன் மாத எண்கணித பலன்கள் - 3

DIN

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனதில் அனைவருக்கும் நல்லது நினைக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழிலில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனு சரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை வியாழக்கிழமை அன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

SCROLL FOR NEXT