2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மனசாட்சியுடன் நடந்து கொள்ளும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.
குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்.
எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். பெண்களுக்கு புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
பரிகாரம்: பைரவரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.