எண் ஜோதிடம்

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 3

எண்கணிதப்படி எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மற்றவர்களின் குணமறிந்து நடந்து கொள்ளும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.

அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு இருந்த குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் நவக்கிரக குருவை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்பு, உயா்கல்விக்கு கே-கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்துடன் விநாயக மிஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

காற்று மாசுபாட்டை குறைக்க மாற்று எரிபொருள்: நிதின் கட்கரி

கருமந்துறை அரசு பழப் பண்ணையை ஆராய்ச்சி நிலையமாக தரம் உயா்த்த கோரிக்கை

குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை: காங்கிரஸ்

மன்னாா்குடி கோயிலில் இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT