4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.
தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும்.
பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.