எண் ஜோதிடம்

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

எண்கணிதப்படி எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெறும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும்.

மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். பெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும்.

கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

ஓணம் பாரம்பரியம்... மௌனி ராய்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

SCROLL FOR NEXT