மாதப் பலன்கள் 
தமிழ் மாதப் பலன்கள்

மார்கழி மாதப் பலன்கள்: கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராஹூ - லாப ஸ்தானத்தில்  குரு  (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

22-12-2025  அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-01-2026 அன்று புதன்  பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026  அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் மனக் கவலை உண்டாகலாம். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

 மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

 உத்திரம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

ஹஸ்தம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.

சித்திரை:

இந்த மாதம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிச 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: டிச 22, 23, 24

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ. 1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னை வாடிக்கையாளர்!

சித்தாவரம்

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.15% ஆக குறைப்பு!

சாயல்

மழையும் வெயிலும்...

SCROLL FOR NEXT