மாதப் பலன்கள் 
தமிழ் மாதப் பலன்கள்

கார்த்திகை மாதப் பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

 கிரகநிலை:

 ராசியில் குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் (வ. நி) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ. நி), ராஹூ - என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றங்கள்:

 27-11-2025 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 06-12-2025  அன்று புதன்  பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 பலன்:

 சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே நீங்கள் கற்பனை வளம் மிக்கவர்கள். இந்த மாதம் காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையாலம். உங்கள் பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம். பணியில் இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இருக்காது.

வியாபாரிகளுக்கு பெரும் முன்னெற்றம் இருக்கும். பண்ம் புழங்கும் இடங்களில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளர்களையே அமர்த்துவது மிக முக்கியமாகும். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகள் பலமாகவே இருக்குமாயினும் உங்கள் சமயோஜித புத்தியினால் சமாளிப்பது நல்லது.

மாணவர்களுக்கு விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் கூட சிரமங்கள் ஏற்படக்கூடும். சிலர் மேற்படிப்பை தொடர முடியாமல் வாய்ப்புகளைத் தேடவும் முயல்வீர்கள்.

கலைத்துறையினருக்கு உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடக்கூடும்.

அரசியல்துறையினருக்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி  தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும்.  பொறுமையாக் இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மிகப்பெரும் பொறுப்பான பதவிகளைப் பெற்று மகிழவும் வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும்.

உடல்நலத்தில் மிக அதிக செலுத்துவது அவசியம். முக்கியமாக வயிறு மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

 புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம்  உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பூசம்:

இந்த மாதம்  நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.

ஆயில்யம்:

இந்த மாதம்  கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

 பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்:  நவ 28, 29

 அதிர்ஷ்ட தினங்கள்:  நவ 20, 21, 22

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுப் பாரம்பரியம்... விமலா ராமன்!

ஒரு நாளில் 1,000 கி.மீ.! 5 நாள்களில் 5,400 கி.மீ. தூரம் கடந்த பறவை!

சோலை இளங்கிளியே... கௌரி கிஷன்!

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

SCROLL FOR NEXT