மாதப் பலன்கள் 
தமிழ் மாதப் பலன்கள்

கார்த்திகை மாதப் பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கும்பம்(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

 கிரகநிலை:

 ராசியில் சனி (வ. நி), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு  - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் (வ. நி) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றங்கள்:

 27-11-2025 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 06-12-2025 அன்று புதன்  பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 பலன்:

 தங்களது சொந்த பலத்தை மட்டுமே உறுதியானது என நம்பி, தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளராகும் கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்கள்  காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக  விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. உங்கல் உயர் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வர வேண்டும்.

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம்.

மாணவர்களுக்கு ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் மேன்மை நிலை அடையலாம்.

கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து  முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு                 குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

 அவிட்டம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம்  தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள்.  வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

சதயம்:

இந்த மாதம்  குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:

இந்த மாதம்  மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

 பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி  வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்:  நவ 17, டிச 13, 14

 அதிர்ஷ்ட தினங்கள்:  டிச 6, 7 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

பட்டுப் பாரம்பரியம்... விமலா ராமன்!

ஒரு நாளில் 1,000 கி.மீ.! 5 நாள்களில் 5,400 கி.மீ. தூரம் கடந்த பறவை!

சோலை இளங்கிளியே... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT