ஆட்டோமொபைல்ஸ்

அசோக் லேலண்ட் விற்பனையில் 14 சதவீத வளர்ச்சி

DIN

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஜூலை மாத வாகன விற்பனை 14.19 சதவீதம் வளர்ச்சி பெற்றதாக அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது:
கடந்த ஜூலை மாதத்தில் நடுத்தர ரகம் மற்று கனரக வாகனங்களின் விற்பனை 10.32 சதவீம் வளர்ச்சி பெற்றது. சென்ற மாதத்தில் அவ்வகை வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 9,026 -ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 8,182 எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 10.32 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 27.92 சதவீதம் வளர்ச்சி பெற்றது. இவ்வகை வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 2,955 ஆக இருந்தது. சென்ற ஆண்டு ஜூலையில் 2,310 இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனையாகின.
மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 11,981 ஆகும். கடந்த ஆண்டு ஜூலை விற்பனையைவிட இவ்வாண்டு 14.19 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்று அசோக் லேலண்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT