ஆட்டோமொபைல்ஸ்

டியாகோ ஏ.எம்.டி.: டாடா அறிமுகம்

DIN

டாடா மோட்டார்ஸ், ’டியாகோ ஏ.எம்.டி.' என்ற புதிய ரக காரை புது தில்லியில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாடா மோட்டார்ஸ் தலைவர்(பயணிகள் வாகன விற்பனை பிரிவு) மயங்க் பாரேக் இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:
டியாகோ கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே தொடர்ந்து வரவேற்பு பெருகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு,மேம்படுத்தபட்ட தொழில்நுட்பத்தில் ’டியாகோ ஏ.எம்.டி (ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்)' என்ற புதிய ரக காரை டாடா அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய வகை காரில், கியர் என்பது ஆட்டோமேட்டிக், நியூட்ரல், ரிவர்ஸ் மற்றும் மேனுவல் ஆகிய நான்கு நிலைகளில் காணப்படும். மேலும், வேகத்தின் உண்மையான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் உணரும் வகையில், ஸ்போர்ட்ஸ் மற்றும் சிட்டி ஆகிய இரண்டு செலுத்தும் முறைகள் இதில் அமைக்கப்பட்டு உள்ளன.
’டியாகோ ஏ.எம்.டி.' ரக காரின் புதுதில்லி விற்பனையக விலை ரூ.5.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள டாடாவின் 597 விற்பனை மையங்களிலும் இவ்வகை கார்கள் விற்பனைக்கு வரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT