ஆட்டோமொபைல்ஸ்

உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனை சூடுபிடிப்பு

DIN

பயணிகள் கார் விற்பனை உள்நாட்டு சந்தையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் 14.68 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைமை இயக்குநர் சுகதோ சென் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: 2017-18 புதிய நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரலில் பயணிகள் வாகன விற்பனை 14.68 சதவீதம் என்ற அளவில் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளதற்கு புதிய உற்பத்தி ஆலைகள், பிஎஸ்-4 நவீன தொழில்நுட்பத்தில் புதிய மாடல்கள் அறிமுகம் உள்ளிட்டவையே முக்கிய காரணம். சென்ற ஏப்ரலில் 2,77,602 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 2,42,060-ஆக காணப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக உள்நாட்டு கார் விற்பனை 17.36 சதவீதம் வளர்ச்சியடைந்து 1,90,788-ஆக இருந்தது. இதற்கு முன்பாக 2015-ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் கார் விற்பனை 21.8 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை 23.10 சதவீதம் அதிகரித்து 1,44,081-ஆக இருந்தது. கார் விற்பனையில் இந்த நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இருசக்கர வாகனப் பிரிவில் விற்பனை 7.34 சதவீதம் அதிகரித்து 16,74,796-ஆக காணப்பட்டது. குறிப்பாக, கிராமப்புறங்களில் ஸ்கூட்டர்களுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்தது. இதையடுத்து, ஏப்ரலில் அவற்றின் விற்பனை 4,68,550 என்ற எண்ணிக்கையிலிருந்து வளர்ச்சி கண்டு 5,86,886-ஆக காணப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 10,24,895-லிருந்து அதிகரித்து 10,29,972-ஆக இருந்தது.
அதேசமயம் வர்த்தக வாகனங்கள் விற்பனை 22.93 சதவீதம் சரிந்து 41,490-ஆக காணப்பட்டது. 2009 ஜனவரி மாதத்தில் வர்த்தக வாகனங்கள் விற்பனை அதிகபட்சமாக 67 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு, சென்ற ஏப்ரலில்தான் இப்பிரிவிலான வாகன விற்பனை இந்த அளவுக்கு சுணக்கமடைந்தது.
மொத்த வாகன விற்பனை 19,00,848-லிருந்து 6.82 சதவீதம் அதிகரித்து 20,30,476-ஆக காணப்பட்டது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT