ஆட்டோமொபைல்ஸ்

ரூ.1.12 லட்சத்தில் மஹிந்திராவின் இ-ரிக்ஷா

DIN

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மின்சார பேட்டரியில் இயங்கக்கூடிய இ-ஆல்பா மினி என்ற வாகனத்தை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: மஹிந்திரா குழுமம் வாகன மின்மயமாக்கலை நோக்கி மற்றொரு அடி எடுத்து வைத்துள்ளது. அந்த வகையில், உள்ளூர் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக மூன்று சக்கர வாகன பிரிவில் பேட்டரியில் இயங்கும் இ-ஆல்பா மினி என்ற இ-ரிக்ஷாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து இருக்கைகளைக் கொண்ட இந்த இ-ஆல்பா மினியில் 120ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் 85 கி.மீ. வரை பயணிக்கலாம்.
வரும் காலங்களில் மின்-வாகன பிரிவில் மேலும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறோம். ஏற்கெனவே மின் வாகன தயாரிப்புகளுக்காக ரூ.500 கோடியை முதலீடு செய்துள்ளோம்; மேலும், ரூ.600 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். மஹிந்திரா தற்போது மாதத்துக்கு 500 மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை அடுத்த சில மாதங்களில் 1,000-மாகவும், அடுத்த சில ஆண்டுகளில் 5,000-ஆகவும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
மஹிந்திராவின் புதிய இ-ரிக்ஷாவை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT