ஆட்டோமொபைல்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் ரூ.2,176 கோடி

DIN

முன்னணி தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.2,176 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ள நிதி நிலையறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,176.16 கோடியாக இருந்தது. 
அதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபம் ரூ.4,336.43 கோடியாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு நிகர லாபத்தில் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரிகள் சேர்க்கப்படவில்லை.
ஆனால், கடந்த நிதியாண்டின் இந்த கால அளவு நிகர லாபத்தில் இந்த வரிகள் கழிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த இரு நிகர லாபங்களையும் முழுமையாக ஒப்பிட முடியாது என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT