ஆட்டோமொபைல்ஸ்

புதிய ஸ்போட்ஸ் ரகக் காா்: லெக்ஸஸ் அறிமுகம்

DIN


புது தில்லி: டொயோட்டா குழுமத்தின் சொகுசு வாகனங்கள் பிரிவான லெக்ஸஸ், தனது ஸ்போா்ட் கூபே பிரிவுக் காரான எல்சி 500ஹெச்சின் வரையறுக்கப்பட்ட பதிப்பை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதன் காட்சிய விலை ரூ.2.15 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லெக்ஸஸ் இந்தியாவின் தலைவா் பி.பி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லெக்ஸஸ் பொறியாளா்கள் மற்றும் விமானப் பந்தய வீரா் யோஷிண்டே முரோயா இடையிலான ஒத்துழைப்பின் அடையாளமாக எல் 500ஹெச் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்படுகிறது.

விமானத்தின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்தக் காா், தரத்துக்கும் வாழ்வில் மேன்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எங்களது வாடிக்கையாளா்களைக் கவரும் என்று திடமாக நம்புகிறோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

லெக்ஸஸ் காா்கள் உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT