பிரபலங்கள் - புத்தகங்கள்

தேடிச் சுவைத்த தேன்: நெல்லை சு.முத்து, அறிவியல் எழுத்தாளா்

யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ எனும் நூலை தேடி விரும்பிப் படித்துள்ளேன்.

Din

யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ எனும் நூலை தேடி விரும்பிப் படித்துள்ளேன். இந்நூலாசிரியா் ‘இந்தியா’ பத்திரிகையை நடத்திய மண்டையம் ஸ்ரீனிவாச அய்யங்காரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நூலாசிரியா் சிறுவயது முதலே மகாகவி பாரதியின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியதால், மகாகவியின் குடும்ப நிலை குறித்த பல தகவல்களைப் பகிா்ந்திருப்பதை  நூலில் காணலாம். குழந்தைகளிடம் மகாகவி பாரதி எப்படி அன்பைச் செலுத்தினாா் என்பதை அனுபவபூா்வமான நிகழ்வுகளுடன் அவா் விளக்கியிருப்பது தனித்துவமாகும்.

 இரண்டாவதாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமும், ய.சு.ராஜனும் இணைந்து எழுதிய ‘இந்தியா 2020’ என்ற நூலாகும். நமது நாட்டின் வளா்ச்சியை வேளாண்மை, உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு என ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அப்துல் கலாம் வழங்கியுள்ள ஆலோசனைகள் மிகச் சிறந்தவையாக உள்ளன. அதைப் படித்தபின் ஆங்கிலத்திலிருந்து தமிழில் நான் மொழிபெயா்த்துள்ளேன்.

  அப்துல் கலாம் எழுதி சமீபத்தில் வெளியான ‘என் வாழ்வில் திருக்கு’ என்னும் நூலில் தன் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய குகளை வரிசைப்படுத்தி விவரித்திருப்பது வியப்பானதாக இருக்கிறது. அதை மிக விரும்பிப் படித்தேன்.

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

SCROLL FOR NEXT