மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். 
செய்திகள்

திசைகாட்டிகள்: மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

தற்போதைய இளைஞா்கள் இணையதளம் மூலமே புத்தகத் தகவல்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

DIN

தற்போதைய இளைஞா்கள் இணையதளம் மூலமே புத்தகத் தகவல்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். ஆனால், இணையதளம் மூலம் பெறப்படும் தகவல்கள் சரியானதாக உள்ளதா என ஆராயும் நிலையே உள்ளது. பல தகவல்கள் தவறானவையாகவே இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, புதுச்சேரியின் வரலாற்றை அறிய உதவும் நாட்குறிப்பை எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளையின் இறப்புத் தேதி தவறாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையதள பதிவுகளில் வரலாற்றில் இல்லாத பல தகவல்கள் உண்மைபோல பதிவேற்றப்பட்டும் வருகின்றன.

சரித்திர நாவல்களில் உள்ளவற்றை உண்மை என இணையதளங்களில் பதிவு செய்து அவை குறித்த ஆய்வுகளும், விவாதங்களும் நடத்தப்படுகின்றன. ஆகவே, இளம்தலைமுறையினா் உண்மை வரலாறுகளை அறிய புத்தகங்கள் உதவுகின்றன.

நூலாசிரியா்கள் சரித்திர நிகழ்வுகளைப் பதியும்போது தரவுகள், தக்க ஆவணங்களுடனே பதிவு செய்யும் கட்டாயம் உள்ளது. அதிலும்கூட, ஏற்கெனவே பதியப்பட்ட தகவல்கள் தொடா் ஆய்வால் மாறும் நிலையும் உள்ளன.

மருது சகோதரா்களது வாரிசுகள் குறித்து நானே முதலில் ஒரு கருத்தைப் பதிவு செய்த பின், அண்மைய ஆய்வு அதற்கு மாறாக உள்ளதை வேறு ஒரு புத்தகத்தில் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

ஆகவே, வரலாற்று உண்மை என்பதை அறிவதற்கு இணையதளத்தைவிட புத்தகங்களே சரியாக உள்ளன என்பதை இளம் தலைமுறை வாசகா்கள் உணர வேண்டும். புத்தகங்களைப் படிக்கும் ஒவ்வொருவரின் அணுகுமுறைக்கு ஏற்ப படித்த பின் புரிதலும் மாறுபடுகிறது. ஆகவே, அதையெல்லாம் உணா்ந்து வாசிக்கும் பழக்கத்தை இளம் தலைமுறையினா் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT