செய்திகள்

கண்டெடுத்த கருவூலம்!

மீனாட்சி புத்தக நிலையத்தால் கடந்த 1974-இல் வெளியிடப்பட்ட இந்த நூலானது கடந்த 2021-இல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆய்வியல் அறிமுகம், டாக்டர் தமிழண்ணல், டாக்டர் எம்.எஸ்.இலக்குமணன், பக்கங்கள் 280, விலை ரூ.250,

மீனாட்சி புத்தக நிலையத்தால் கடந்த 1974-இல் வெளியிடப்பட்ட இந்த நூலானது கடந்த 2021-இல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் விற்பனைக்கும் புத்தகக் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேராசிரியரும், பொருளாதாரப் பேராசிரியரும் இணைந்து புதிய ஆய்வியல் நோக்கில் தமிழ் படிப்போருக்கும், ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

இப்புத்தக அடிப்படையில் காமராஜர் பல்கலை.யில் ஆய்வுக் கருத்தரங்கமும் நடைபெற்றுள்ளது. புத்தகத்தில் 22 தலைப்புகளில் தமிழ் மொழியில் கடைப்பிடிக்க வேண்டிய ஆய்வு முறைக் கல்வி, ஆய்வும் ஆய்வேடும், ஆய்வைத் திட்டமிட்டுத் தொடங்குதல், நூலகமும் ஆய்வேடும், ஆய்வறிக்கை எழுதும் முறை என தமிழாய்வு குறித்து மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது.

எந்தக் காலத்துக்கும் தமிழ் ஆய்வறிஞர்களுக்குப் பொருந்தும் வகையில் நூல் எழுதப்பட்டிருந்தாலும், தற்போதுதான் இரண்டாவது பதிப்பாக இந்நூல் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

SCROLL FOR NEXT