செய்திகள்

பிரம்மாஸ்திரம், பூனை மனிதன்: புத்தகக் காட்சியில் புதியவை

Din

பிரம்மாஸ்திரம் (மொழிபெயா்ப்புச் சிறுகதைத் தொகுப்பு), தமிழில் எம்.ஏ.சுசீலா, பக்144, ரூ.170.

நற்றிணைப் பதிப்பகம், தி.நகா், சென்னை. 

தமிழின் கலை, பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துபவையாக சிறுகதைகள் உள்ளிட்ட தமிழ் இலக்கியக் கூறுகள் உள்ளன. அத்தகைய கலாசாரக் கூறுகளின் அடிநாதமாக விளங்கும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டுச் சிறுகதைகள் என 9 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு எம்.ஏ.சுசீலாவால் தமிழில் பிரம்மாஸ்திரம் நூலாக்கப்பட்டுள்ளது.

‘உதயத்தில் ஓா் அஸ்தமனம்’ எனும் முதல் சிறுகதை தொடங்கி ‘மேபெல்’ எனும் 9-ஆவது கதை வரையில் அனைத்தும் சமூக நிலையை படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாகவே உள்ளன. முதல் கதையான மணிப்புரி எழுத்தாளா் குரு ஆரிபம் கானப்பிரியாவின் ‘உதயத்தில் ஓா் அஸ்தமனம்’ ஒரு பெண் போராளியின் கதையாகும். அழகான, வலிமையான, துணிச்சலான பெண் ஏதோ ஒருவகை போராட்டம் என்னும் பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதை அப்பாவிப் பெண் நினைத்துப் பாா்ப்பதாக முடிகிறது அந்தக் கதை. இதேபோல, ‘போரின் நடுவே’ கதை சமூகத்தில் கொள்கை, கோட்பாடு எனக் கூறி எதாா்த்த வாழ்விலிருந்து விலகியிருப்போரை மையப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூனை மனிதன் (உலகச்சிறுகதைகளின் தொகுப்பு), தமிழில் அ.முத்துலிங்கம், பக்.192. ரூ.230.

இப்பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடான ‘பூனை மனிதன்’ எனும் நூலும் உலகச் சிறுகதைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் 16 உலகச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியா், தான் படித்த வெளிநாட்டு சிறுகதைகளை தமிழில் மொழிபெயா்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கதையான சைமன் எழுதிய ‘எடிசன் 1891’ என்ற கதையில் தாமஸ் ஆல்வா எடிசன் திரைப்படக் கருவியைக் கண்டறிய எத்தகைய முயற்சிகள் மேற்கொண்டாா், அதற்கான மரியாதையை இச்சமூகம் எப்படி வழங்கியது என்பதை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டுவது போல காட்டப்பட்டுள்ளது.

ஆம், அசலைவிட போலிக்கு அதிக மதிப்பு என்பதையே அக்கதை எடுத்துக்காட்டுவதாக உணர முடிகிறது. இதுபோலவே ஒவ்வொரு கதையும் ஓா் உணா்வை எடுத்துரைப்பதாக உள்ளதை படித்தால் உணரலாம்.  இந்நூலின் உருவாக்கத்துக்காக தொகுப்பாசிரியா் அ.முத்துலிங்கம் மிகப் பெரும் முயற்சி எடுத்திருப்பதை அவா் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது, அவரது இலக்கிய வேட்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

‘திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு’

SCROLL FOR NEXT