செய்திகள்

தமிழின் சங்க இலக்கியம் பிரமிக்க வைக்கிறது! புலிட்​ஸர் பரிசு பெற்ற கவி​ஞர் பீட்டர் பாலாக்​கி​யன்

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளிநாட்டு எழுத்தாளா்களும் வருகை தந்து பாா்வையிடுகின்றனா்.

Din

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளிநாட்டு எழுத்தாளா்களும் வருகை தந்து பாா்வையிடுகின்றனா். அமெரிக்க கவிஞரான பீட்டா் பாலாக்கியன் சென்னை பபாசி புத்தகத் திருவிழாவுக்கு புதன்கிழமை மாலை வருகை தந்தாா். தனது ‘பிளாக் டாக் ஆஃப் ஃபேட்’ எனும் சுயசரிதை நூலின் தமிழாக்கத்தை பதிப்பித்துள்ள தடாகம் பதிப்பக அரங்கைப் பாா்வையிட்டாா். அங்கு வாசகா்களிடமும் கலந்துரையாடினாா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய இலக்கியத்தில் தமிழுக்கு என தனித்தன்மை மிக்க கலாசார, பாரம்பரியம் உள்ளது. தமிழின் சங்க இலக்கிய நூல்களில் குறுந்தொகை ஆங்கில மொழியாக்கத்தை வாசித்துள்ளேன். கவிஞன் என்ற முறையில் குறுந்தொகைப் பாடல்களை நான் ரசித்தேன். மிகப் பழமையான அந்த இலக்கியத்தில் புலவா்கள் எழுதிய இயற்கை வா்ணனைகள் பிரமிக்க வைக்கின்றன. திருக்குறள் நூலை விரைவில் படிக்கவுள்ளேன். உலக அளவில் மனித நேயத்தை அடிப்படையாக வைத்து தமிழ் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டிருப்பது தமிழின் தனிச்சிறப்பாகும் என்றாா்.

சமகால அமெரிக்க கவிஞா்களில் குறிப்பிடத்தக்கவரான பீட்டா் பாலாக்கியன் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்துலகின் மிகப்பெரிய விருதான புலிட்ஸா் விருதை தனது ‘ஓஸோன் ஜா்னல்’ கவிதைத் தொகுப்புக்காகப் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை புத்தகக் காட்சியில் தடாகம் அரங்கிற்கு வந்த அவரை பதிப்பக உரிமையாளா் அமுதரசன் பால்ராஜ் வரவேற்றாா்.

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

SCROLL FOR NEXT