பதிப்பகத்  தடங்கள்

மணிவாசகர் பதிப்பகம்

மணிவிழா காணும் மணிவாசகர் பதிப்பகம் திருக்குறளின் மூலமும் உரையும் மற்றும் மகாகவி பாரதி, பாரதிதாசன் என முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மணிவிழா காணும் மணிவாசகர் பதிப்பகம் திருக்குறளின் மூலமும் உரையும் மற்றும் மகாகவி பாரதி, பாரதிதாசன் என முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளது.

 திருக்குறளில் புலியூர்க்கேசிகன் உரை, பாரதியார் கவிதைகள், பாரதியாரின் பகவத் கீதை, அவரது தாகூர் கவிதைகள், பாரதியாரின் கண்ணன், குயில் பாட்டு தொகுப்பு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இசையமுது, பாண்டியன் பரிசு, திரு.வி.கலியாணசுந்தரனாரின் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், உள்ளொளி, வள்ளலார், முதுமுனைவர் சுப.மாணிக்கத்தின் ஏழிளந்தமிழ், அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு, ஒüவை துரைசாமிப் பிள்ளையின் செம்மொழிப் புதையல், மறைமலை அடிகளாரின் முல்லைப் பாட்டு ஆராôய்ச்சி உரை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை, கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை, தியாக பூமி, கள்வனின் காதலி, மயிலை சீனி.வேங்கடசாமியின் மனோன்மணீயம் தெளிவுரை, கெüதம  புத்தர் உள்ளிட்ட தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்களின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 புதிதாக ஜாதகப் புத்தகங்கள், திரைப்படப் புத்தகங்கள் என தற்கால வாசகர்களுக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ளன. முனைவர் ஆர்.ராமநாதனின் "தமிழர் கதை மரபு', பி.எஸ்.ராமையாவின் "மணிக்கொடி காலம்', முனைவர் ச.குருசாமியின் "சேரர் அரசியல் நெறி', புதுயுகனின் "உலகத் தமிழ் இலக்கியமும் வாழ்வியலும்', புலவர் இ.ப. நடராஜனின் "கம்பனில் திருக்குறள்', முனைவர் ப.ஜீவகனின் "சீவக சிந்தாமணியில் எதிர்நிலைத் தலைவன்', ஒüவை துரைசாமிப் பிள்ளையின் "சேரர் வரலாறு', முனைவர் சு.கிருஷ்ணகுமாரின் "பறையர் இன வரலாறு' ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன எனக் கூறுகிறார் அந்தப் பதிப்பகத்தின் உரிமையாளர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT