தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கிழக்கு பதிப்பகமானது புனைவு எழுத்துடன், அறிவியல், அரசியல் தலைவர்கள், பொருளாதாரம், தேசத்தின் சரித்திரம், உலகத் தலைவர்கள் சரித்திரம், உளவுத் துறைகளின் சரித்திரம் என பலதரப்பட்ட நூல்களை வெளியிட்டுவருகிறது.
பதிப்பகத்தில் சவுக்கு சங்கரின் "ஊழல்-உளவு-அரசியல்', மருதனின் "சே குவேரா - வேண்டும் விடுதலை', "விடுதலைப் புலிகள்' உள்ளிட்டவைகளும், எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள் உள்ளிட்ட நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போதைய சென்னை புத்தகக் காட்சி விழாவுக்காக, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்ற ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய "இஸ்ரோவின் கதை வியப்பூட்டும் விண்வெளிப் பாய்ச்சல்', வாஞ்சிநாதன் சித்ரா எழுதிய "இந்திய மக்களாகிய நாம்', எஸ்.கிருஷ்ணன் எழுதிய "சோழர்கள் -ஒரு பொற்காலத்தின் வரலாறு', ஆர்.முத்துக்குமாரின் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகம் திரண்ட வரலாறு- மொழிப்போர், ராமச்சந்திர குஹா எழுதி தமிழில் ஆர்.பி.சாரதி மொழிபெயர்த்த "இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு...' இரு தொகுதிகள், சோம.வள்ளியப்பனின் "எமோஷனல் இன்டெலிஜன்ஸ் -இட்லியாக இருங்கள்', சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் "பிசினஸில் சொல்வதெல்லாம் பொய்', மருதனின் "லெனின் முதல் காம்ரேட்', ஹாலித் எடிப் எழுதி தமிழில் இஸ்க்ரா மொழிபெயர்த்த "நான் கண்ட இந்தியா', சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்', "கொலையுதிர் காலம்', நிவேதிதா லூயிஸ் எழுதிய "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை' (தமிழகத் தொல்லியல் தடங்கள்), ஆர்.முத்துக்குமாரின் "திராவிட இயக்க வரலாறு', ராம் அப்பண்ணசாமியின் கோஹினூர்- உலகின் புகழ் பெற்ற வைரத்தின் கதை, நன்மாறன் திருநாவுக்கரசு எழுதிய "உயிர் -ஓர் அறிவியல் வரலாறு' ஆகிய புதிய வரவுகள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்கிறார் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.