வர்த்தகம்

ரானே ஹோல்டிங்ஸ் நிகர லாபம் ரூ.37.50 கோடி

DIN

ரானே குழுமத்தைச் சேர்ந்த ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.37.50 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எல். கணேஷ் தெரிவித்துள்ளதாவது: சந்தை சூழல் சாதகமாக இருந்ததையடுத்து, ரானே குழும நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. வலுவான செயல்பாட்டு செயல்திறன் காரணமாக குழும நிறுவனங்களின் லாப வரம்பும் உயர்ந்துள்ளது. மேலும் சில வர்த்தக நடவடிக்கைகளில் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வரும் காலாண்டுகளிலும், சந்தை சூழல் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.562.03 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.567.31 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.97.95 கோடியிலிருந்து குறைந்து ரூ.37.50 கோடியானது. செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டு காலத்தில் வருவாய் ரூ.1,104.26 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.1,100.64 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.116.94 கோடியிலிருந்து சரிந்து ரூ.73.48 கோடியானது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT