வர்த்தகம்

5ஜி யுகத்துக்கு ஆயத்தம்!

DIN

3ஜி, 4ஜி சேவைகளை அறிமுகம் செய்வதில் இந்தியா பின்தங்கி விட்டது போல 5ஜியிலும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
முன்னேறிய நாடுகளுக்கு சளைக்காத வகையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த போதுமான அலைக்கற்றை கையிருப்பு வைத்திருக்க அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
உலகின் முன்னணி தொலைத்தொடர்பு சந்தைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், 5 ஜி சேவையை உரிய தரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும் புதிய தொலைத்தொடர்பு கொள்கை குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 
5ஜி தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்திட மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கி விட்டது. ஆறு மாத கால சோதனைக்கு பிறகு, 5ஜி சேவையை தொடங்கத் தேவையான தர நிர்ணய விதிமுறைகள் வகுக்கப்படும். 
5ஜி தொழில்நுட்ப தொலைத் தொடர்பு சாதனங்கள், செல்லிடப்பேசிகள், செயலிகளை உள்நாட்டிலேயே உருவாக்கம், மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. 
5ஜி சேவையை ஒருங்கிணைத்து செயல்படுத்த வழிகாட்டும் வகையில் தொலைத் தொடர்பு செயலர் தலைமையில் அனைத்து அதிகாரமும் பொருந்திய உயரிய அமைப்பு உருவாக்கப்படும்.
4ஜி நெட்வர்க்கில் வினாடிக்கு 1ஜிபியாக இருக்கும் பதிவிறக்க வேகம், 5ஜி நெட்வர்க்கில் வினாடிக்கு 20ஜிபியாக இருக்கும். மருத்துவம், தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற துறைகளில் இதனால் பெரும் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT