வர்த்தகம்

சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்வு

DIN

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 29,000 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்தது. பிப்ரவரி மாதத்துக்கான பங்கு முன்பேர கணக்கு முடிப்பையொட்டி வர்த்தக நேர இறுதியில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, பங்கு வர்த்தகத்தின் ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.
முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதையடுத்து தொலைத் தொடர்புத் துறை பங்குகளின் விலை 1.82 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 1.70 சதவீதமும், தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 1.65 சதவீதமும் அதிகரித்தன.
அதே சமயம், எண்ணெய்-எரிவாயு, மோட்டார் வாகன துறை பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பில்லை.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டி.சி.எஸ். பங்கின் விலை 2.99 சதவீதமும், விப்ரோ 2.53 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.73 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.36 சதவீதமும் உயர்ந்தன. அதேச சமயம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 2.07 சதவீதமும், பவர் கிரிட் 1.09 சதவீதமும் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் அதிகரித்து 28,892 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 8,939 புள்ளிகளாக நிலைத்தது.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு மஹாசிவராத்திரியை முன்னிட்டு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT