வர்த்தகம்

ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், பங்குச்சந்தையில் வீழ்ச்சி, இந்திய ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.16 அதிகரித்து, ரூ.21,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதே நிலை நீடித்தால் ஒரு சில நாள்களில் தங்கத்தின் விலை ரூ.22 ஆயிரத்தை எட்டும் என்று தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து 2-ஆவது நாளாக வெள்ளியின் விலை வீழ்ச்சிடையந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.40,390-க்கு விற்பனையானது.
சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,745
ஒரு பவுன் தங்கம் 21,960
ஒரு கிராம் வெள்ளி 43.20
ஒரு கிலோ வெள்ளி 40,390

வெள்ளிக்கிழமை விலை
நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,743
ஒரு பவுன் தங்கம் 21,944
ஒரு கிராம் வெள்ளி 43.30
ஒரு கிலோ வெள்ளி 40,440

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT