வர்த்தகம்

வட்டி குறைப்புக்கு பிறகு வீட்டு கடன் கோருவோர் மும்மடங்கு அதிகரிப்பு: எஸ்.பி.ஐ.

DIN

கடனுக்கான வட்டி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு, வீட்டு கடன் கோருவோர் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட்
வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
பாரத ஸ்டேட் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் குறைப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. அதன் எதிரொலியாக, ஆன்லைன் வழியாக வீட்டுக் கடன் கோரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது.
ஏனைய வங்கிகளும் வட்டி குறைப்பில் ஈடுபட்டாலும், அவற்றின் வட்டி விகிதம் எங்களின் அளவுக்கு குறைவானதாக இல்லை. வீட்டுக் கடன் கோரி வரும்
விசாரணைகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். 
உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. அதன்பிறகு, இதுவரையிலும் வங்கியின்
கடன் வழங்கல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு சூடுபிடிக்கவில்லை. எனவே, தற்போது முழு கவனத்தையும் கடன் வழங்கும் இலக்கை நோக்கியே
செலுத்தி வருகிறோம்.
பழைய நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, வங்கியின் பற்று அட்டை மூலமான பணப் பரிவர்த்தனை மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோன்று, மொபைல் வாலட் மூலமான பணப் பட்டுவாடாவும் மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் சிறப்பாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் 1 லட்சம் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) "ஸ்வைப்பிங்' இயந்திரங்களை நிறுவினோம். ரூபாய் நோட்டு விவகாரத்துக்குப் பிறகு மட்டும் 45,000 இயந்திரங்களை நிறுவியுள்ளோம். எனவே, நடப்பு ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஓஎஸ் இயந்திரங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்
அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT