வர்த்தகம்

இன்டஸ்இண்ட் வங்கி லாபம் 29% அதிகரிப்பு

DIN

தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 29 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இன்டஸ்இண்ட் வங்கி ரூ.4,716.1 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,766.7 கோடியாக இருந்தது.
வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, வங்கியின் நிகர லாபம் ரூ.581.02 கோடியிலிருந்து 29.1 சதவீதம் அதிகரித்து ரூ.750.6 கோடியாக இருந்தது.
வங்கி வழங்கிய மொத்த கடனில் 0.82 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் விகிதம் அதிகரித்து 0.94 சதவீதமாக காணப்பட்டது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 0.33 சதவீதத்திலிருந்து அதிகரித்து 0.39 சதவீதமாக இருந்தது என்று இன்டஸ்இண்ட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT