வர்த்தகம்

அட்சயப் பாத்திரமாகும் ஜீவன் அக்ஷய்!

DIN

நடப்பு நிதி ஆண்டுக்கான எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான கால அளவில் ரூ.27,350.67 கோடியை எட்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒரே முறை பிரீமியம் செலுத்தும் எல்.ஐ.சி. பாலிசிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, இப்பிரிவிலான பிரீமியம் வருவாய் 167.75 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் முதல் அல்லது புதிய பிரீமியம் வருவாய் வாயிலாக ரூ.31,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், ஜனவரி 15- வரையில் இப்பிரிவிலான பிரீமியம் வருவாய் ரூ.27,350.67 கோடியை தொட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் முதல் பிரீமியம் வருவாய் 81.6 சதவீதம் அதிகரித்தது.
இதையடுத்து, நடப்பு நிதி ஆண்டில் முதல் பிரீமியம் வருவாய் இலக்கைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஐ.சி.யின் எட்டு மண்டலங்களில், தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் ஏற்கெனவே புதிய பிரீமிய இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட எல்.ஐ.சி.யின் ஜீவன் அக்ஷய் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக, இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த முதல் பிரீமியம் வருவாய் ரூ.13,739.73 கோடியாக இருந்தது. குறிப்பாக, ஜீவன் அக்ஷய்-6 திட்டத்தின் மூலமாக கிடைத்த முதல் பிரீமியம் மட்டும் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.4,365.15 கோடியாக காணப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் 2.05 கோடி பாலிசிகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், ஏற்கெனவே 1.24 கோடி பாலிசிகள் விற்பனையாகி உள்ளன. மொத்த இலக்கில் 60 சதவீதம் எட்டப்பட்டு விட்டது.
இருப்பினும், பங்குச் சந்தை சார்ந்த யுலிப் திட்டங்களுக்கான பாலிசி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT