வர்த்தகம்

எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.2,728 கோடி

DIN

வீட்டு வசதி கடன் வழங்கல் நடவடிக்கையில் முன்னணியில் உள்ள எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.2,728.66 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ.14,981.41 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.12,253.9 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.2,419 கோடியிலிருந்து 12.80 சதவீதம் அதிகரித்து ரூ.2,728.66 கோடியாக இருந்தது.
மூன்றாவது காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் 0.72 சதவீதத்திலிருந்து அதிகரித்து 0.81 சதவீதமாக காணப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.6,730 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,972 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனம் வழங்கிய கடன் ரூ.2,86,876 கோடியாக காணப்பட்டது.
பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.35,000 கோடி நிதி திரட்டிக் கொள்ள நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எச்.டி.எப்.சி. நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT