வர்த்தகம்

ஏசிசி லாபம் 32% அதிகரிப்பு

DIN

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசிசி இரண்டாம் காலாண்டு லாபம் 32.57 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏசிசி நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் சிமெண்ட் விற்பனை வாயிலாக ரூ.3,818.21 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,238.69 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 17.89 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.246.07 கோடியிலிருந்து 32.57 சதவீதம் அதிகரித்து ரூ.326.23 கோடியாக இருந்தது.
சிமெண்ட் விற்பனை ஜூன் காலாண்டில் 61.20 லட்சம் டன்னிலிருந்து 10.13 சதவீதம் அதிகரித்து 67.40 லட்சம் டன்னை எட்டியது என ஏசிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏசிசி நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT